ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்;

Update: 2021-06-09 13:10 GMT

ஆம்பூர் அருகே 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அடர்வனம் அமைக்கும் திட்டத்தினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துவக்கிவைத்தார். 

இதில் புங்கை மரம், அரச மரம், வேப்பமரம், உள்ளிட்ட மரக்கன்றுகளை நடும்  பணியை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், துரை, மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஊராட்சி செயலாளர் பத்மநாபன் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News