ஆம்பூரில் மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

ஆம்பூரில் மலை கிராம மக்கள் 231 பேருக்கு ஜாதி சான்றிதழை  சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வழங்கினார்

Update: 2021-07-03 14:15 GMT

மலை கிராம மக்களுக்கு ஜாதி சான்றிதழை  வழங்கும் எம்எல்ஏ வில்வநாதன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராம பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாதி சான்றிதழ் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இதனையடுத்து அப்பகுதிக்கு கடந்த 10 நாட்களாக கிராம பகுதிக்கு சென்று அதிகாரிகள் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இன்று ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தலைமையில் 231 பேருக்கு மலைவாழ் மக்களுக்கான ஜாதிச் சான்றிதழை வழங்கினார்

பின்னர் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் கிராம பகுதிக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையத்தை விரைவில் கொண்டு வருவதாக உறுதியளித்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர்( கோட்டாட்சியர் பொறுப்பு ) அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் உடனிருந்தனர்

Tags:    

Similar News