ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்

ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Update: 2021-12-15 15:36 GMT

வெல்லதிகமணிபெண்டா மலை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்ட எம்எல்ஏ வில்வநாதன்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெல்லதிகமணிபெண்டா மலை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் பின்னார் மலைக்கிராம மக்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதனை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமையும் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மோகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News