கானாற்றில் வெள்ளநீர் சீராக செல்ல உடனடி நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ வில்வநாதன்
கானாறு தரைப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுத்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன்,;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் ஏ.கஸ்பா, சோமலாபுரம் மெயின் ரோடு சிவராஜபுரம் பகுதியில் கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு அருகே உள்ள வீடுகளுக்கு தண்ணீர் செல்லும் அபாயம் இருப்பதாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளை வரவழைத்து, கானாற்று தரைப்பாலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்ட இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார் மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் குமார் ஆம்பூர் நகர மாணவரணி அமைப்பாளர் வசந்த்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்