மருதநாயகத்துக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க தமிமுன் அன்சாரி கோரிக்கை
தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலைவர் தமிமுன் அன்சாரி முன்வைத்துள்ளார்;
விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு சில கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முன்வைத்துள்ளார். அதன்படி,
தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பு செய்த அனைவராலும் கவிக்கோ என்று கூறப்பட்ட கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் தமிழ் இலக்கியத்திற்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு அமைத்து தர வேண்டும்
சென்னை அண்ணாசாலையில் மரியாதைக்குரிய காயிதே மில்லத்இஸ்மாயில் சாகிப் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. அங்கு அன்றாட மக்கள் அதை பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான நூலகம் ஒன்று அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்
சுதந்திர போராட்ட தியாகிகளை தமிழக அரசு சிறப்பித்துக் கொண்டிருக்கிறது ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்திக் காட்டிய விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் அவர்களுக்கு மதுரையில் நூலகத் துடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும்
அதேபோல் ஆம்பூர் ரெட்டி தோப்பு மேம்பாலம் மற்றும் சாலைகளை சீர் அமைத்து தரக் கோரியும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.