ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜிர் அஹம்மத் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பங்கேற்பு

Update: 2021-03-22 12:44 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நஜிர் முஹம்மது அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு வேட்பாளர் நஜிர்  முஹம்மதை அறிமுகப்படுத்தி பேசினார்

ஆம்பூர் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்தது. ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கட்சிக்கும் ஆட்சிக்கும் துரோகம் செய்து விட்டு சென்று விட்டார். அதனால் இடைத்தேர்தல் நடைபெற்றது.  அந்த இடைத்தேர்தலின் காரணமாக அதிமுக தோல்வியை சந்தித்தது

இனி 2021 தேர்தலில்  ஆம்பூர் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும். அதற்காக நீங்கள் அத்தனை பேரும் 15 நாட்கள் சிரமம் பாராமல் உழைக்க வேண்டும் என அமைச்சர் நிர்வாகி தொண்டர்களிடம் கூறினார். 

இக்கூட்டத்திற்கு அதிமுக நகர செயலாளர் மதியழகன் தேர்தல் பொறுப்பாளர் டில்லி பாபு மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்





Tags:    

Similar News