மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்றவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்
ஆம்பூர் அருகே மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்கச் சென்ற கூலித்தொழிலாளி தவறி விழுந்து பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றின் குறுக்கே ஓ.வி. ரோடு - கிருஷ்ணா தியேட்டர் பகுதியை இன்னைக்குகூடிய தரைப்பாலம் உள்ளது. இங்கு தேவலாபுரம் ஊராட்சி எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பாலாற்றில் வரக்கூடிய தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தனர் இதை வேடிக்கை பார்க்க அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் அங்கு வந்துள்ளார்.
அப்போது அவர் திடீரென பாலாற்றில் செல்லக்கூடிய தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக பாலாற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த இருந்து பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாலாற்று வெள்ளத்தில் சிக்கியிருந்த அவரை மீட்பதற்காக போராடியும் பலனளிக்காமல் நீரில் மூழ்கிய பழனியை சடலமாக மீட்டனர். உடனடியாக விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்