காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு சடலமாக மீட்பு
ஆம்பூர் அருகே தரைபாலத்தை கடக்க முயன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குபேந்திரன் இவர் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது அப்போது கடந்த 19ஆம் தேதி நடராஜபுரம் பாலத்தை கடக்க முயன்ற முறுக்கு வியாபாரி குபேந்திரன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக தீயணைப்பு துறையினர் காட்டாற்று வெள்ளத்தில் தேடி வந்தனர்,
இந்நிலையில், இன்று சிவராஜபுரம் காட்டாறு பகுதியில் தரைப்பாலத்தில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி தகவல் கொடுத்தனர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுடன் வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை போராடி மீட்டனர்.
பின்னர் அங்கு வந்த குபேந்திரன் உறவினர்கள் சடலத்தை பார்த்து உறுதி செய்த பின்னர் சடலத்தை காவல்துறையினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.