நிலத்தை அளவிட லஞ்சம் வாங்கிய ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் கைது

தனிநபர்  நிலத்தை அளவிடுவதற்காக  லஞ்சம் வாங்கிய ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர்;

Update: 2022-01-29 14:46 GMT

லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்ட ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பாலாஜி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் இவர் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட்  நிலம் மற்றும் 3 வீட்டு மனையை  அளவிடுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் சேகரை கடந்த டிசம்பர் மாதம் நில அளவை குறித்து நில அளவையர் நேரில் அழைத்து பேசியுள்ளார். அப்போது ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரியும் பாலாஜி,  சேகரிடம் நான்கு இடங்களை அளவை செய்ய 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.  இதுகுறித்து சேகர் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஒருமாத காலமாக பாலாஜியை கண்காணித்து வந்த நிலையில், இன்று ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேகர்  8 ஆயிரம் ரூபாய்  பாலாஜியிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

நில அளவை செய்ய ரூபாய் 8 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கையும் களவுமாக பிடித்து கைது செய்த சம்பவம் அதிகாரிகள் இடையில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News