காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை
ஆம்பூரில் ஃபரிதா குழும காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை , புதுச்சேரி ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது ஆம்பூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.