ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்;

Update: 2021-09-04 16:11 GMT

கனமழை காரணமாக தெருக்களில் பெருக்கெடுத்த மழைநீர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்   கனமழை  பெய்து வருகிறது. இதில் ஆம்பூர் நகரம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

மேலும் மாதனூர், பாலூர், வெங்கிளி, வடபுதுப்பட்டு, கிழ்முருங்கை, சோமலாபுரம், சாத்தம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும்  லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News