ஆம்பூரில் 181 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் எம்எல்ஏ வழங்கல்

ஆம்பூரில் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் 181 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தை எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்கினார்.

Update: 2021-07-19 15:56 GMT

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கத்தை பயனாளிகளுக்கு வழங்கும் எம்எல்ஏ வில்வநாதன்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம்  திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜியன் ஆகியோர் கலந்துகொண்டு 181 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்கள்.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் மகேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, தினகரன், தி.மு.க. மாதனூர் ஒன்றிய கழக பொறுப்பாளர அகரம்சேரி சுரேஷ்குமார் குடியாத்தம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News