வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான உபகரணங்கள்: கலெக்டர் அனுப்பி வைத்தார்
மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்;
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நாளை நடைபெறுகின்றன மாதனூர் ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆம்பூர் அடுத்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இராஜசேகர், வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்..