ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்
ஆம்பூரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது வேன் மோதியதில் உயிரழந்தார். வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியிலிருந்து சுமார் 42 பெண் தொழிலாளர்களை ஏற்றுகொண்டு வேன் வந்து கொண்டிருந்தது. சான்றோர்குப்பம் அருகே வந்தபோது, நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி 85 வயது முதியவர் அய்யாவு மீது மோதியது. பின்னர் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 15க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர், உடனடியாக படுகாயம் அடைந்த முதியவர் மற்றும் பெண் தொழிலாளர்களை அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முதியவர் அய்யாவு உயிரிழந்தார்.
15-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்