ஆம்பூர் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாடு
ஆம்பூர் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரன். இவர் விவசாயம் செய்து கொண்டே, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது பசுமாடு ஒன்று ஒரே பிரசவத்தில் மூன்று கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. மூன்று கன்றுக்குட்டிகளும் நல்ல உடல்நலத்துடன் பிறந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த விவசாயி, அதற்கு பொட்டு வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். இந்த தகவல் கிராமத்தில் பரவியதால் கிராம மக்கள் அனைவரும் கன்று குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.