ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகை: எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்கினார்
ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்தினார்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்
அதன் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார் அந்த திட்டத்தை கடந்த 10 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் 7 குடும்ப அட்டை அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக 2000 ரூபாய் வழங்கி திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 ரேஷன் கடைகளில் உள்ள 72 ஆயிரத்து 480 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன
இந்நிலையில் கதவாளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்
இதில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்..