ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர் குஷ்வாஹா

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்;

Update: 2021-06-25 17:00 GMT

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

ஆம்பூர் அருகே மலை கிராமத்திற்கு சென்று பார்வையிட்ட கலக்டர் அமர் குஷ்வாஹா
  • whatsapp icon

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி மலை கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஊரக வளர்ச்சி திட்ட செயல்படுகள் மற்றும் அடிப்படை வசதிகள் எவ்விதத்தில் உள்ளன என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கிராமத்திற்கு தேவைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார் இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் தினகரன் என அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags:    

Similar News