ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு
ஆம்பூர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பெற்று வரும் நபர்களை பிபிகிட் உடையணிந்து கலெக்டர் எம்எல்ஏ ஆகியோர் ஆய்வு செய்தனர்..;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பிபிஇ கிட் உடை அணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சென்று பார்த்து அவர்களிடம் நலம் விசாரித்தனர்
மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் மருத்துவமனையில் ஆக்சிசன் எவ்வாறுள்ளது சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் என்ன என்பதைக் குறித்து கேட்டறிந்தார். இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் இருந்தனர்