ஆம்பூர் அருகே தடுப்பணை உடைந்து வீணான தண்ணீர்: விவசாயிகள் வேதனை

ஆம்பூர் அருகே தடுப்பணை உடைந்து விளைநிலங்களுக்கு தேவையான தண்ணீர் வீணானது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

Update: 2021-11-27 05:34 GMT

சேதமடைந்த பைரப்பள்ளி மேர்லமிட்டா ஏரி தடுப்பணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி மேர்லமிட்டா ஏரிக்கு, சாணி கணவாய் கானாறு , சின்னதுருகம், தேன்கல் கானாறு, தொம்மகுட்டை, சேஷவன் கிணறு, எர்ரகுண்ட , ரெங்கையன் கிணறுகள் வழியாக வரக்கூடிய கானாறு வழியாக நீர் வருகிறது. 

தொடர்ந்து தமிழக ஆந்திர வன பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏரி வேகமாக  நிரம்புகிறது. அங்கு இருந்து வெளியேறக்கூடிய உபரி நீரை  சேமித்து விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் கடந்த 2012-2013 ஆம் ஆண்டு  தமிழக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது இந்த தடுப்பணை வழியாக பாசன கால்வாய் மூலம் சுமார் 200 ஏக்கருக்கு விவசாய நிலம் பாசன வசதி பெற்றுள்ளது 

தற்போது பெய்த தொடர் கனமழை காரணமாக தடுப்பணை உடைந்து சேதமானதால்,  இதில் சேமிக்கப்பட்ட தண்ணீர்  விவசாய நிலத்திற்குள் நுழைந்து வீணாக சென்றுள்ளது.  இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்

Tags:    

Similar News