ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஆண் குழந்தை உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. உமராபாத் போலீசார் விசாரணை  ;

Update: 2021-06-21 14:50 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பனங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் புஷ்பராஜ். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் 3 வது குழந்தையான வெற்றிவேல் (வயது 1) தனது வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளான்.  உடனடியாக உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தை வெற்றிவேலை மீட்டு  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்

பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தை வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து உமராபாத் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

நேற்று முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News