ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
ஆம்பூரில் ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம். காவல் துறையினர் சமரசம் செய்தனர்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தார். அப்போது விதிமுறைகளை மீறி நேற்று நேதாஜி சாலையில் உள்ள 3 காலணி கடைகள் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்
இன்று அங்கு வந்த வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தனியார் துணிக்கடை ஒன்றை திறக்கச் சொல்லி துணிகளை எடுத்துள்ளார். அப்போது சீல் வைத்த கடையினர் அனைவரும் ஒன்று திரண்டு ஊரடங்கு உத்தரவை மீறி நீங்கள் செயல்படுகிறது நியாயமா?.. என்று கேட்டு செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டனர். அப்போது வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வியாபாரி ஒருவருடைய செல்போனை கையிலிருந்து பறித்துக்கொண்டு தனது வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு புறப்பட்டார்
உடனே வியாபாரிகள் சிலர் அவர் வாகனத்தை செல்லவிடாமல் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வியாபாரி ஒருவர் வட்டாட்சியரிடம் அவரது செல்போனை பிடுங்கும் முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது
உடனடியாக அங்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் மற்றும் காவல் துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அனைவரும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது