ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று
ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி என்பவர் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி;
ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி கொரோனா நோய் தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் ராணி இவர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 3 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பில் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர் பணிபுரிந்த ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கிராமிய காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆம்பூர் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்தி வருகின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த காவலர்கள் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.