ஆம்பூரில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலய சொர்க்கவாசல் திறப்பு
சிறப்பு பூஜைகள் செய்து காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறந்தபோது, கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்;
ஆம்பூரில் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிந்து மாதவர் பெருமாள் ஆலயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோன ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பின்பற்றி சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.