ஆம்பூர் அருகே மரக்கன்றுகளை நடும் பணி
ஆம்பூர் அருகே 5000 மரக்கன்றுகளை நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின்கீழ் அடர்வனம் அமைக்க 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் என கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்