ஆம்பூர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;

Update: 2021-10-03 17:00 GMT

ஆம்பூர் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் எம்பி கதிர் ஆனந்த்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, வீரகுப்பம், ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வேலூர் எம்பிஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆலங்காயம் ஒன்றியம் 3 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரியதர்ஷினி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அவருடன் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய  செயலாளர் ஞானவேலன் குமாரமங்கலம், மலையாம்பட்டு, வீரகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து கிளை கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் அவை தலைவர்கள் பிரதிநிதிகள் இளைஞர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News