அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: ஆம்பூர் ஜெயின் சங்கம் வழங்கியது
ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை எம்எல்ஏ வில்வநாதன் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆம்பூர் ஜெயின் சங்கம் சார்பில் ரூ.3.40 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியினை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
இதில் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, வட்டார மருத்துவ அலுவலர் இராமன், ஜெயின் சங்க நிர்வாகி கிஷன்லால் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.