திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பாசனபள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கட்டிட மேஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் தேவேந்திரன் (வயது 32) என்ற கட்டிட மேஸ்திரியை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராணி மற்றும் போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...