அதிராம்பட்டினம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2021-09-24 13:00 GMT

பாலசுப்ரமணியன்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,59, இவரது மனைவி ராஜேஸ்வரி,47, இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பாலசுப்ரமணியன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை போல, 2017 டிசம்பர் 8ம் தேதி, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், கருங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்ட்டுள்ளார். இதில், அவர் இறந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிராம்பட்டினம் போலீசார், பாலசுப்ரமணியனை கைது செய்து, தஞ்சாவூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News