நுகர்வோர் விரும்பும் கோ 52 ரக நெல்லை பயிரிடுங்க..! மானிய விலையில் விதை கிடைக்குது..!

நுகர்வோர் விரும்பும் சன்ன ரக கோ 52 நெல்லை விவசாயிகள் பயிரிட தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

Update: 2024-09-17 12:46 GMT

கோ 52 ரக நெற்பயிர் 

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு சன்னரக நெல் சாகுபடிக்கு ஏற்ற கோ 52 வகை நெல் மானியவிலையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என்று  மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ற சன்னரக நெல்லை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு இடையே சன்னரக நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு கோ 52 நெல் ரகமானது தற்போது மதுக்கூர் வட்டாரம் கீழ குறிச்சிவேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  கிலோ ஒன்று  ரூபாய் 19 மானியத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

நுகர்வோர் விரும்பும் கோ52 அரிசி

கோ52 அரிசி நுகர்வோர் விரும்பும் வகையில் மிதமான ஜெல் நிலைத்தன்மையுடன் மிதமான அமைலோஸ் உள்ளடக்கம் உள்ளது. இது சன்னரக நெல் பிபிடி 5204 மற்றும் கோ 50 ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இலைகளின் நீளம் 40 சென்டிமீட்டர் வரை உள்ளதால் அதிக இலைப்பரப்புடன் அதிக உற்பத்திக்கும் உறுதி அளிக்கிறது.

135 நாள் வயதுடைய இந்த ரகமானது 50% பூக்கள் 105 நாட்களில் வந்துவிடும். பயனுள்ள தூர்கள் 25 முதல் 30 கொண்டது கதிர்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி நீளத்துக்கு இருக்கும். ஆயிரம் வெண்மணிகளின் எடை 14 கிராம் உடையது. ஒரு செடிக்கு 50 முதல் 55 கிராம் தானிய மகசூல் தரவல்லது. தானியம் நடுத்தர மெல்லிய நல்ல ரகம் ஆகும்.

சம்பா தாளடி பருவத்துக்கு ஏற்ற ரகம். எக்டருக்கு 6200 கிலோ மனசு தரவல்லது. 2017 ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டது.எம்ஜிஆர்100 என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பி பி டி 5204 விட 10 மடங்கு அதிக மகசூல் தரவல்லது. குலை நோய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே விவசாயிகள் குறுவை நெல் அறுவடைக்கு பின் கோ52 பயிரிட்டு பயனடைய மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி  கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News