பசு சாணம், கோமியம் பயன்படுத்தி விவசாயம் செய்ங்க : மாவட்ட வேளாண் துணை இயக்குனர்..!
நலமான சூழலில் வளமான பயிர் வளர்த்து நஞ்சில்லா உணவளிக்க மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நலமான சூழலில் வளமான பயிர் வளர்த்து நஞ்சில்லா உணவளிக்க வேண்டும் என மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் பாவாஜி கோட்டை கிராமத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நெல் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி 6 வகுப்புகளாக நடத்தப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற இரண்டு உழவர் வயல்வெளி பள்ளிகளுக்கான இறுதி நாள் வகுப்பில் தஞ்சை மாவட்ட மத்திய திட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி கலந்துகொண்டார்.
அதிக அளவிலான பெண் விவசாயிகள் கலந்து கொண்டது மட்டுமின்றி விவசாயிகள் தங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்பங்களை நலமான சூழலில் வளமான பெயரை உருவாக்கி நஞ்சில்லாத உணவை அனைவருக்கும் அளிக்க கேட்டுக் கொண்டார். மேலும் விவசாயிகள் இயற்கையிலேயே கிடைக்கும் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி பயிருக்கு தேவையான உரங்களை தயாரிப்பதோடு பூச்சி விரட்டிகளையும் தயாரித்து பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.
பசுமையான மாட்டுச்சாணம் எவ்வாறு வீடுகளில் மட்டுமின்றி விவசாயத்திலும் நோய்கள் வருவதை கட்டுப்படுத்த உதவுவதை விளக்கிக் கூறினார். பின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்த பாவாஜி கோட்டையை சேர்ந்த 3 விவசாயிகளுக்கு பின்னேர்ப்பு மானிய அடிப்படையில் 16 லிட்டர் விசை தெளிப்பான்களை வழங்கினார். பின் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு ஜிங்க்சல்பேட் உரத்தினை வழங்கினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 அரை ஏக்கருக்கு தலா 5 கிலோ விதம் வரப்பு பயிராக உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பாவாஜி கோட்டை ஊராட்சி மன்ற ஊர் தலைவர் சாமிநாதன் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு மற்றும் அய்யா மணி சிசிதிட்டஅலுவலர் ரம்யா ஆகியோர் விவசாயிகளுக்கு நெல் பயிர் சாகுபடி செய்யும் இடங்களில் வரப்பு பயிராக உளுந்து உளுந்து பயிரிடுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறி விவசாயிகளுக்கு வழங்கினார்.
சிரமேல்குடி கிடங்கு மேலாளர் முருக லட்சுமி விவசாயிகள் அனைவரையும் பதிவு செய்தார். தஞ்சை மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த செயலாளர் கலைவாணன் அவர்கள் நன்மை தீமை செய்யும் பூச்சிகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை கீழ குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் செய்திருந்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் வயல் வெளிப்பள்ளி காண கையேடு மற்றும் குறிப்பேடுகளை வழங்கி நன்றி கூறினார்.