மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.95 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

Update: 2021-07-29 13:30 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,287 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.2,37,915 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் 50மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,150 வீதம் மொத்தம் ரூ.57,500 மதிப்பீட்டில் நடைபயிற்சி உபகரணங்கள என மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,95,415 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா பேருந்து பயண சலுகை, உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகளும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கோவிட்தொற்றில் இருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கோவிட் தடுப்பூசி தவறாது செலுத்தி கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

Tags:    

Similar News