கீரனூர் அருகே கடம்பபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 50 மரக்கன்றுகள் நட்டார்

Update: 2021-06-05 11:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 50 மரக்கன்றுகள் நட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கடம்பபட்டியில் இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம், பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் கடம்பபட்டி பகுதியில் சுற்றுச்சூழலை நேசிப்போம் என்ற நோக்கத்தின்படி மரக்கன்றுகள் நடப்பட்டன. சமூக ஆர்வலரான இவர் ஒவ்வொரு வருடமும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

அதன்படி, இந்த வருடமும் 50 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடப்படும் மரக்கன்றுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News