கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : திறந்து வைத்த எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.;

Update: 2021-06-14 13:46 GMT
கீரனூர்  அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் :  திறந்து வைத்த எம்எல்ஏ
கீரனூர் அருகே சத்தியமங்கலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்துவைத்தார்.
  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று பலமுறை கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News