கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, போலீசார் கபசுர குடிநீர் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.;
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீரனூர் பகுதியில் கொரோனா நோய் பரவாமல் இருப்பதற்காக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து போலீஸ் டிஎஸ்பி சிவசுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் இராமலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.