சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி தினேஷ் சக்கரவர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி யைச் சேர்ந்தவர் தினேஷ் சக்கரவர்த்தி. இவர் கடந்த 02-11-2003 ஆம் ஆண்டு, தனது வீட்டின் அருகே வசித்து வந்த 4 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறை வாகி விட்டார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர், மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற குற்றவாளியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு வரை குற்றவாளியை போலீசார் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதைய டுத்து, சிறுமியின் பெற்றோர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது கடந்த 2005ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் குற்றவாளி தினேஷ் சக்கரவர்த்தியை தேடிவந்தனர்.
கடந்த( 2020 ) ஆண்டு தினேஷ் சக்கரவர்த்தி கர்நாடகாவில் இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் கர்நாடகாவுக்குச்சென்று, தலைமறைவாக இருந்த தினேஷ் சக்கரவர்த்தியை கைதனர். கோடை கால மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை, விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, தினேஷ் சக்கரவர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை, தீவிரமாகத் தேடிச்சென்று கைது செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உறுதுணையாக இருந்த, சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயகுமாரிக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.