கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கல்

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

Update: 2024-05-26 08:15 GMT

Namakkal news- நாமக்கல் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்றில், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், விவசாயிகள் உழவுப்பணி மற்றும் பல்வேறு வேளாண் பணிகளை துவக்கி உள்ளனர். இந்த நிலையில் கூட்டுறவுத் துறை மூலம், 2023-24ம் ஆண்டிற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாவட்டத்தில் உள்ள 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர்கள், ரொட்டவேட்டர் மற்றும் கலப்பைகள் உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மோகனூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரூர் ஆலம்பட்டி, செவிட்டுரங்கம்பட்டி ஆகிய தொடக்க வேளாண்மை சங்கங்களில் வேளாண்மை கருவிகளை குறைந்த வாடகைக்குப் பெறலாம். எருமப்பட்டி வட்டார விவசாயிகள் பொட்டிரெட்டிப்பட்டி, வரகூர் கூட்டுறவு சங்கங்களிலும், புதுச்சத்திரம் வட்டார விவசாயிகள் திருமலைப்பட்டி கூட்டுறவு சங்கத்திலும், வெண்ணந்தூர் வட்டார விவசாயிகள் அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்திலும், நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகள் திம்மநாய்க்கன்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், நாரைக்கிணறு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெறலாம்.

எலச்சிபாளையம் வட்டார விவசாயிகள், எலச்சிபாளையம் கூட்டுறவு சங்கத்திலும், மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகள் கூத்தாநத்தம், செண்பகமகாதேவி கூட்டுறவு சங்கங்களிலும், பரமத்தி வட்டார விவசாயிகள் கூடச்சேரி கூட்டுவு சங்கத்திலும், கபிலர்மலை வட்டார விவசாயிகள் பெருங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் வேளாண் கருவிகளை குறைந்த வாடகைக்கு பெறலாம். சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அருகில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அனுகி டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெற்று உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News