காஞ்சிபுரம் அதிகரித்து வரும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்

காஞ்சிபுரம் நகர பகுதிகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

Update: 2021-04-16 04:00 GMT

காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் நகரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 253 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நோய் பரவலை தடுக்க காஞ்சிபுரம் பெருநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை 12  பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பாதிக்கப்பட்டோரிடமிருந்து பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  இன்று மேலும் பல பகுதிகளில் பரவல் அதிகம் உள்ளதாகவும்,  எனவே பரவலை கட்டுபடுத்த  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெருநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News