ராகுல் பிறந்தநாள்: சிக்கன் பிரியாணி வழங்கிய காஞ்சி காங்கிரஸார்

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்தநாள் இன்று காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது

Update: 2024-06-19 14:00 GMT

ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 54ஆவது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்க பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு முந்தியாதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழாவினை இந்தியா முழுவதும் காங்கிரஸார் அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் மார்க்கெட் அருகே உள்ள காமராஜ் சிலை அருகே அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர காங்கிரஸ் தலைவர் நாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் உள்ளிட்ட காங்கிரஸார் கலந்து கொண்டு அங்குள்ள காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும் காங்கிரஸ் கொடி ஏற்றியும் கொண்டாடினர்.

இதனை எடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க 50 கிலோ சிக்கன் பிரியாணி எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர்.

சிக்கன் பிரியாணியை வாங்க அப்பகுதியில் ஏராளமான குவிந்த நிலையில், சற்று நேரம் மட்டுமே வரிசையில் வந்தவர்கள் பெற்று சென்ற நிலையில் திடீரென அனைத்து பொதுமக்களும் பிரியாணி பாத்திரத்தினை சுற்றி வளைத்து முற்றுகையிடுவது போல் செய்கையில் ஈடுபட்டனர்.

உடனடியாக பிரியாணி வழங்குவது நிறுத்தப்பட்டு காவல்துறை உதவி நாடியும் காவல் துறையின் பேச்சைக் கேட்காமல் பிரியாணி வாங்குவதை குறிக்கோளாகக் கொண்டு தள்ளுமுள்ளு ஈடுபட்டனர்.

ஒரு வழியாக அனைத்தும் அளிக்கப்பட்ட பின்பும் மக்கள் அங்கிருந்து செல்லாமல் பிரியாணிக்காக காத்திருந்த காட்சிகள் அரங்கேறியது

இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பத்மநாபன், அன்பு, பார்த்தசாரதி, டேவிட் உள்ளிட்ட நகர, ஓன்றிய காங்கிரஸ் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News