பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடுமலை சாலை கருப்பராயன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை திடீரென அடைத்தனர்.

Update: 2024-01-08 05:45 GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள ஊஞ்சாலம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம் பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல நெடுஞ்சாலை துறையினர் இடத்தை ஒதுக்கி இருந்தனர்.

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் சார் ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரவுண்டான அமைத்து தருமாறு பலமுறை மனுக்கள் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடுமலை சாலை கருப்பராயன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை திடீரென அடைத்தனர். இதனால் 3 கிலோமீட்டர் பொதுமக்கள் சுற்றி சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவானது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அடைக்கப்பட்டு இருந்த பாதையை நெடுஞ்சாலைத் துறையினர் திறந்தனர். இதனால் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News