பொள்ளாச்சியில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் நீதிபதி உயிரிழப்பு

உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார்.;

Update: 2024-07-16 12:49 GMT
பொள்ளாச்சியில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் நீதிபதி உயிரிழப்பு

நீதிபதி கருணாநிதி

  • whatsapp icon

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் கருணாநிதி. 58 வயதான இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கி சாலையை கடந்துள்ளார்.

அப்போது உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த ஒரு இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த ஒரு மாதம் முன்பு பழநியில் உள்ள நீதிமன்றத்தில் இருந்து ஊட்டிக்கு மாறுதல் பெற்று சென்றார் என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News