மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்

Coimbatore News- மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதை வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-28 15:45 GMT

Coimbatore News- கைது செய்யப்பட்டவாலிபர் பிச்சை பாண்டி.

Coimbatore News, Coimbatore News Today- கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் மதுக்கரை மார்க்கெட் அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது, கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த வேத்பிரகாஷ் சோன்கர்(30) என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதேபோல செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் மலுமிச்சம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிச்சை பாண்டி(23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில் கடந்த 01ம் தேதி முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 66 நபர்கள் மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 93.645 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News