கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Coimbatore News- கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2024-05-02 06:15 GMT

தற்கொலை செய்து கொண்ட பபிஷா (கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today- கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி.ஐ.எஸ்.எல். என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன் என்பவரின், 18 வயது மகள் பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் அந்த கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் சக மாணவிகளுடன் தங்கியிருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே குதித்ததில் தலையில் படுகாயமடைந்த மாணவி பபிஷாவை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பபிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டன் மஞ்சுளா என்பவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக விடுதியில் பபிஷா உடன் தங்கி இருந்த சக மாணவிகளிடம் விசாரித்த போது நேற்று காலையில் ஒருவருடன் பபிஷா பேசிக் கொண்டிருந்ததும், பின்னர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றததும் தெரியவந்தது.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News