வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் கைது

விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்திருந்தனர்.;

Update: 2024-03-02 06:45 GMT

விஜயராகவன்

கோவை காந்திபுரம் பகுதில் வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் என்பவர் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் விஜயராகவன தான் எனவும், பினாமி பெயரில் மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக மதுரையில் இருந்த வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் விஜயராகவன் என்கிற குருஜியை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரையில் இருந்த விஜயராகவனை காவல் துறையினர் கைது செய்த போது, நெஞ்சுவலி என தெரிவித்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து விஜயராகவனை கைது செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கோவைக்கு அழைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News