அமரன் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் : வானதி சீனிவாசன் கோரிக்கை
Coimbatore News- மாநில முதல்வர் ரசித்த படத்தை தமிழகத்தின் மாணவச் செல்வங்கள் ரசிக்க வேண்டும். வரி விலக்கு கொடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே பேருந்து நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நாளையும் நாளை மறுதினமும் முதல்வர் கோவை வருகிறார். ஏற்கனவே அவர் கோவை வந்த போது கோவை தொடர்பான கோரிக்கைகள் அவரிடம் கொடுத்திருந்தோம்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும் பொழுது இன்னும் முழுமையாக காலி செய்யப்படவில்லை. நில உரிமையாளர்கள் அதில் இருக்கின்றனர். அதனால் பணிகளை ஆரம்பிப்பதில் சுமக்கும் இருக்கிறது. நிலத்தை ஒப்படைக்கின்ற போது முழுமையாக காலி செய்து ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மாநில அரசு நிறைய தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது. உடனடியாக கேட்கின்ற தகவல்களை முழுமையாக கேட்க வேண்டும்.
விஜய் குறித்து சீமான் சொல்லியுள்ள கருத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என துணை முதல்வர் சொன்னார். அந்த ரகசியம் தெரியும் என சொன்னார். மூன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை.எது சாத்தியம் இருக்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் சொல்வோம். கடந்த முறை சந்தித்த பொழுது வைக்கப்பட்ட கோரிக்கைகளை பொறுமையாக முதல்வர் கேட்டார். கோரிக்கைகளை முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு என்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்களை ஒரு அரசியல் கட்சி யோசித்து பார்க்க வேண்டும். எல்லாரும் சொல்கின்றனர் என்று பேசக்கூடாது. விஜய் இதை எதிர்க்கிறார் . அவரைப்போலவே பல கட்சியினரும் சொல்கின்றனர். மத்திய அரசு இதை எப்படி மக்களிடம் எப்படி தெளிவாக சொல்கின்றது என்பதை பார்க்கலாம். விஜய் அவர்களும் ஓரே நாடு ஓரே தேர்தல் விடயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை சொல்லுகின்றனர் என்றால், அதையும் விஜய் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் அதை ஸ்டடி பண்ண வேண்டும்.
பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் மீது ஒரு விஷயத்தை வைத்தால் அவர்களுக்கு பாதுகாக்க சட்டம் இருக்கிறது. பிராமண சமுதாயத்திற்கு இல்லை. பிரமாணருடைய மொழியை கேவலப்படுத்துவது, பிராமண சமூகத்தை அவதூறு படுத்துவது என தொடர்ந்து இருக்கிறது. அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கை. அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னங்களை பயன்படுத்துவது என்பது சரியானது அல்ல.விமர்சனங்களை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமரன் திரைப்படம் நன்றாக இருக்கிறது. ராணுவ தொடர்பாக தெரிந்து கொள்ள இது இளைஞர்களுக்கு வசதியாக இருக்கும்.பட குழுவினருக்கு வாழ்த்துகள், இதில் கூடுதல் சந்தோசம் என்னவென்றால் இது போன்ற படங்களை கமல்ஹாசன் தொடர்ந்து தயாரித்து ரெட் ஜெயின் மூவி மூலம் வெளியிட வேண்டும். அவர்களுக்கு வியாபாரம் நல்லா ஆகட்டும், அதே வேளையில் நல்ல விசயம் மக்களுக்கு செல்லட்டும். இந்த படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக போட்டு காட்ட வேண்டும். ரெட்ஜெயின்ட் மூவி நல்லாவே இருக்கட்டும். மாநில முதல்வர் ரசித்த படத்தை தமிழகத்தின் மாணவச் செல்வங்கள் ரசிக்க வேண்டும். வரி விலக்கு கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.