கோவையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்..!

தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

Update: 2024-10-31 04:45 GMT

தீபாவளி கொண்டாட்டம் 

உலகம் முழுவதும் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அதன்படி மக்கள் பலரும் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அக்கம்பக்கம் வீட்டார்களுக்கும், நண்பர்களுக்கும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, மகிழ்ச்சியுடன் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் அடுத்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்க கூடிய குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குடியிருப்பு வளாகத்திற்குள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அப்போது பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட அசைவ உணவுகளை தயாரித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு விருந்து உண்டு மகிழ்வதும் வாடிக்கை. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை அசைவ விருந்துடன் கொண்டாடும் வகையில் கோயமுத்தூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்க கறிக்கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று இறைச்சிகளை வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

Similar News