7 வயது மகன் காய்ச்சலால் உயிரிழப்பு: தாய், தந்தை விஷம் அருந்தி தற்கொலை

வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது.;

Update: 2024-11-05 06:00 GMT

உயிரிழந்த குடும்பத்தினர்

சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மனைவி வத்சலா. இவர்கள் இருவரும் கோவை வேடம்பட்டி பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி அன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதனிடையே நேற்று அறையை காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை. மாற்று சாவியை கொண்டு அறையை திறந்து பார்த்த போது, வாயில் நுரை தள்ளியவாறு இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து காட்டூர் காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில் அவர்களுக்கு 7 வயதில் மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சல் வந்து இறந்து போனதால் இருவரும் மனமுடைந்து இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கோவை காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News