கோவையில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது - மாநகர காவல் ஆணையாளர் தகவல்

Coimbatore News- கொடூர குற்றங்களான கொலை வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக 30 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 22 சதவீதம் ஆக குறைந்துள்ளது என, மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-18 11:00 GMT

Coimbatore News- கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்.

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் உள்ள ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும் பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

இரண்டாவது முறையாக இந்த ஆண்டு வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான டி சர்ட்டினை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஜெம் மருத்துவமனை அரங்கில் வெளியிட்டார்.

இந்நிகழ்வில்  காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

பெண்கள் அவர்களது வீட்டில் உள்ளவர்களை பார்த்து கொள்வது போல் அவர்களை பார்த்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட சூழலில் நோய்தடுப்பிற்க்காக உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இந்நிலையில் இப்படியான போட்டிகள் அவர்களின் அவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் எனவும் மன நிம்மதியை அளிக்கும். கோவையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. கொடூர குற்றங்களான கொலை வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக 30% என இருந்த நிலையில் தற்போது 22% ஆக குறைந்துள்ளது. இந்த பலன் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சென்று சேர வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேலு, தமிழகத்தில் இரண்டாம் முறையாக இரவு நேரத்தில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 5000 பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அன்றைய தினம் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான சத்துள்ள உணவுகள், யோகா பயிற்சிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட்ட உள்ளது எனத் தெரிவித்தார்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள்www.coimbatorewomensmarathon.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News