செங்குன்றத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பேரணி
செங்குன்றத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது.;
செங்குன்றத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது.
செங்குன்றத்தில் உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின பேரணி திருவள்ளூர் மாவட்ட ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு சார்பில் உதவி பொது மேலாளர் வெங்கட்ராமன் தலைமையில் நடை பெற்றது. துணை திட்ட மேலாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார், முது நிலை திட்ட மேலாளர்கள் நம்பிராஜன், ஜான்சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் சரக சட்டஒழுங்கு ஆய்வாளர் எம்.சி.ரமேஷ் கலந்துகொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி ஆண்டுதோறும் ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இப்பேரணியானது செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலையில் இருந்து செங்குன்றம் பஜார் வரை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் முதுநிலை ஒன்றிய மேலாளர்கள் லதா, ராணி ஆகியோர் அனைவருக்கும் நன்றி கூறினார்.