முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் பொது மக்களுக்கு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி பவானி நகரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் தெற்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மைக்டைசன் ஏற்பாட்டில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை தாய்மார்களுக்கு புத்தாடை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் கட்சியின் அனைத்துநிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.