புழல் ஒன்றிய திமுக சார்பில், வெற்றி கொண்டாட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி உறுதியானதை அடுத்து, திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.;
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை அடுத்து, பழல் பகுதியில் திமுக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்கிரஸ் இன்று காலை முதல் முன்னிலைலேயே இருந்தது. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆலோசனையின் பேரில் செங்குன்றம் அடுத்த வடகரை அண்ணா சிலை அருகே புழல் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
இதில் புழல் ஒன்றிய அவைத்தலைவர் வழக்கறிஞர் ஆர்.செல்வமணி, புழல் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேஸ்வரி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி எம்.ரமேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி.ஏழுமலை, துணைத்தலைவர் தங்கராஜ், செங்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர் தெய்வானை கபிலன், வழக்கறிஞர் பரிமளச் செல்வம், ஜெ.முருகன், எம்.செல்வக்குமார், ஞானசேகரன், விக்னேஷ்வரன், மாரி, காமேஷ், அருணகிரி, வில் அழகன், டென்னீசன், சம்பத், பாஸ்கர், அரவிந்த், இளவரசு,டில்லிபாபு, மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.